Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி சிறப்பு ரயில் இன்று முன்பதிவு

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2007 (12:30 IST)
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு 6-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

தீபாவளி பண்டிகையையொட்டி தெற்கு ரெயில்வே நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது. இந்த ரெயில்களில் தற்போது கூட்டம் நிரம்பி வழிவதால் தூத்துக்குடிக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 6-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் (0619) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்று அடைகிறது.

தூத்துக்குடியில் இருந்து திருச்சிக்கு 7-ந் தேதி சிறப்பு ரெயில் (0620) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 7-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு திருச்சியை சென்று அடைகிறது. இந்த ரெயில் வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நின்று செல்லும்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 5-ந் தேதி சிறப்பு ரெயில் (0630) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழும்பூரை வந்தடைகிறது. இந்த ரெயில் விருதாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமையான இன்று துவங்கியது என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments