Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011ல் தனி அணி அமைத்து போட்டியிடுவோம்: ராமதாஸ் உறுதி!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (16:20 IST)
2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் ப ா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என்பது வெற்று முழக்கம் அல் ல. த ி. ம ு.க., அ. த ி. ம ு.க. அல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கி கூட்டணி ஆட்சி அமைப்பதில் மிகவும் உறுதியாக இருப்பதாக ப ா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார ்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ ், 2020 ம் ஆண்டு சமூ க, பொருளாதா ர, அரசியல் தளங்களில் தமிழர்களும ், தமிழகமும் எத்தகைய நிலையை எட்டவேண்டும் என்று ப ா.ம.க. விரும்புவதை ஒரு வரைவு திட்டமாக வெளியிடுவோம் என்றும் இனி ப ா.ம.க. வின் அரசியல் நடவடிக்க ை, பயணம் அந்த இலக்கை நோக்கியே அமையும் என்றும் தெளிவுப்படுத்தியிருந்தோம ்.

காங்கிரஸ் தலைவர்களும் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள ். அதைப்போலவே நான் 2011ஆம் ஆண்டு ப ா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து தெரிவித்தேன ். அரசியல் கட்சிகளின் இந்த விருப்பம ், லட்சியம் குறித்து அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்கு மிக நன்றாகத் தெரியும ்.

அண்மையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர ், "2011 ம் ஆண்டு ப ா.ம.க. ஆட்சிக்கு வரப்போகிறத ு, அப்போது காவல் துறையை அவர்கள் செயல்பட வைக்கட்டும ், முன்கூட்டியே அட்வான்ஸ் வாழ்த்துக்கள ், பாராட்டுக்கள ்'' என்று சொல்லியிருக்கிறார ். அவர் எத்தகைய எண்ணத்தில ், நோக்கத்தில் கூறியிருந்தாலும ், அவருடைய இந்தக் கருத்தை வாழ்த்துக்களாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம ். ஆட்சியைப் பிடிப்போம ், ஆட்சிக்கு நிச்சயம் வருவோம் என்று நாங்கள் சொல்வது வெற்று முழக்கம் அல் ல. நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொன்னதில் எந்தத் தவறும் இல்ல ை.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் பாதுகாப்பு சம்பந்தமாக காவல் துறையினரின் கவனக்குறைவு பற்றி மட்டுமே விசாரிக்க வேண்டும ். அரசியல் கட்சித் தலைவர்களின் பயணத் திட்டங்கள் எல்லாவற்றையும் காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டியதில்ல ை. கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திடீர் திடீர் என பயணத் திட்டம் மாற்றப்படும ். எனவ ே, இந்த விசாரணை வரம்பை மாற்ற வேண்டும ்.
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை!

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை "தமிழ்நாடு உயர்நீதி மன்றம் - சென்ன ை', " தமிழ்நாடு உயர்நீதி மன்றம் - மதுர ை' என்று மாற்றம் செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும ். அரியலூர் மாவட்டம் தாமதமின்றி தனி மாவட்டமாக செயல்பட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார ்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்து கூறுகையில ், ஆட்சியைப் பிடிப்போம் என்று பலமுறை காங்கிரசார் கூறியும் அதற்கு பதிலளிக்காத முதலமைச்சர ், நாங்கள் அவ்வாறு கூறியபோது கருத்து தெரிவித்திருப்பது நிச்சயம் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

தமிழத்தில் சட்டம ்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை பத்திரிகையாளர்கள்தான் சொல்ல வேண்டும ். 2011 ம் ஆண்டு த ி. ம ு. க, அ. த ி. ம ு.க. இல்லாத அணியை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம ். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம ். 2009 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில்தான் ப ா.ம.க. இடம் பெறும ். இனி எப்போதும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாத ு என்று ராமதாஸ் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments