Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிரூட்டப்பட்ட ``ஏழைகளின் ரதம்'' ரெயில் இயக்க ‌தி‌ட்ட‌ம் : லாலு பிரசாத் யாதவ்!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (10:00 IST)
மாநில தலைநகரங்களை இணைக்கும் வகையில் ``ஏழைகளின் ரதம்'' என்ற முற்றிலும் குளிரூட்டப்பட்ட பயணிகள் ரெயிலை குறைந்த கட்டணத்தில் இயக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறத ு எ‌ன்று ம‌த்‌‌திய ர‌யி‌ல்வே அமை‌ச்ச‌ர் லாலு ‌பிரசா‌த் யாத‌வ் கூ‌றினா‌ர்.

சேலம் ரயில்வே கோட்ட விழா‌வி‌ல் லாலு பேசுகை‌யி‌ல், பதவிக்கு வந்தபோது இவர்கள் என்ன சாதிக்கபோகிறார்கள் என ஏளனம் செய்தார்கள். கடந்த ஆட்சியின் போது ரயில்வே துறை நஷ்டத்தில் இருந்தது. நா‌ங்க‌ள் ஆட்சிக்கு வந்ததும் அதை சரி செய்து லாபமாக மாற்றி காட்டினோம்.

இந்த லாபத்தை கொண்டுவர விசேஷ திட்டம் எதுவும் நா‌ங்க‌ள் தீட்டவில்லை. அதாவது ஏழைகள் அதிகம் பயணம் செய்யும் வழித்தடத்தில் `ஏழைகளின் ரதம்' என்ற பெயரில் புதிய ரெயிலை இயக்கினோம். அதன் மூலம் நஷ்டத்தை சரி கட்டி லாபத்தை காட்டினோம்.

இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கும் திட்டம் பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறேன். நாடு முழுவதும் இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டால் ரெயில்வே துறைக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். மேலும் மாநில தலைநகரங்களை இணைக்கும் வகையில் ''ஏழைகளின் ரதம்'' என்ற முற்றிலும் குளிரூட்டப்பட்ட பயணிகள் ரெயிலை குறைந்த கட்டணத்தில் இயக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது எ‌ன்று ம‌த்‌‌திய ர‌யி‌ல்வே அமை‌ச்ச‌ர் லாலு கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments