Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு 20‌ விழு‌க்காடு போனஸ்: அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (10:10 IST)
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20 ‌ விழு‌க்காடு போனஸ் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில ், 2006-7 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு போனஸ ், கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுக‌ர்பொரு‌ள் வா‌ணிப‌க்கழக பணியாளர் சங்கம் உட்பட அனைத்து சங்கங்களும் அரசுக்கு கோரிக்கை சமர்ப்பித்திருந்தன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள், தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசு போனஸ் சட்டத்திற்கு திருத்தம் வெளியிடுவதை எதிர்நோக்கி, 8.33 ‌ விழு‌க்காடு போனஸ ், 11.67 ‌விழு‌க்காடு கருணைத் தொகை ஆகியவற்றை சேர்த்து, ஆக மொத்தம் 20 ‌ விழு‌க்காடு வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அதிகபட்சமாக வழங்கப்பட்ட தொகையான ரூ.6 ஆயிரத்தை விட இந்த ஆண்டு ரூ.2,400 கூடுதலாக வழங்கப்படும். நேரடி கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 3 ஆயிரத்து 620 பேருக்கு 8.33 ‌ விழு‌க்காடு போனஸ ், குறைந்தபட்ச கருணைத்தொகை ரூ.1,800-ம் வழங்கப்படும். தற்செயல் பணியாளர்களுக்கு கருணைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இதன் மூலம், 16 ஆயிரத்து 857 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள், பருவகால பணியாளர்கள ், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனசும், கருணைத் தொகையும் ரூ.10 கோடியே 89 லட்சம் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு போனஸ் பெறாத ஆயிரத்து 533 பணியாளர்கள் போனஸ ், கருணைத் தொகை பெறுவார்கள். சென்ற ஆண்டைவிட கூடுதலாக ரூ.3.33 கோடி போனஸ ், கருணைத்தொகை அதிகமாக வழங்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments