Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் வலுவிழந்தது! மழை தொடரும்!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (21:17 IST)
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய காரணமாயிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகர்ந்து பலமிழந்துவிட்டது!

நேற்று இரவு 8.30 மணியளவில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்மேற்கு 380 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து கரையில் இருந்து 200 கி.மீ. தூரத்திற்கு வந்திருந்தபோது வலுவிழந்தது.

இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டிலும், புத ு ¨வியலும் பரவலாக மழை பெய்யும் என்றும், சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.

சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அவ்வப்போது மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவிக்கிறது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 21 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 18 செ.மீ., பூவிருந்தவல்லி, கொரட்டூரில் 17 செ,மீ., செங்குன்றம், திருவள்ளூரில் 16 செ.மீ., செங்கையில் 13 செ.மீ., தாம்பரத்தில் 12 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments