Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ்-லாரி மோத‌‌ல்: 5 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (14:31 IST)
கா‌ய்க‌றி லா‌‌‌‌ரி ம‌ீது பேரு‌ந்து மோ‌திய ‌விப‌த்த‌ி‌ல் 5 பே‌‌ர் ப‌ரிதாபமாக உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து சென்னை, கோயம்ப ே‌ட்டி‌ற்கு காய்கற ிகளை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி லாரி சென்று கொண்டு இருந்தது.

லாரியை கர்நா டக‌த்தை சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் ஓட்டி வந்தார். வழியில் சித்தூர் புங்கனூரை சேர்ந்த வ ெங்கடேசன் (70), முள்ளிபாகலை சேர்ந்த சுவாமி (45), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (23), கோலார் நெல்லூரை சேர்ந்த சுப்பிரமணி (19) ஆகியோர் லாரியில் ஏ‌றின‌ர்.

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள புதிய பாலம் அருகே நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து சித்தூர் நோக்கி ஒரு லாரி வந் தது.

அப்போது எதிர்பாராத விதமாக காய்கறி லாரி மீது உள்ள மூட்டைகள் எதிரே வந்த மற்றொரு லாரி மீது உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந ்து லா‌‌ரி எதிரே வந்த ஆந்த ிரா பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் லாரி அ‌ப்பள‌ம் போ‌ல்‌ நொறு‌ங்‌கியது. அ‌தி‌ல் இரு‌ந்த வெங்கடேசன் (70), டிரைவர் ரமேஷ் (30), சுவாமி (45) ஆகியோர் ச‌ம்ப வ இடத்திலேயே ப‌லியா‌யின‌ர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காட்பாடி காவல‌ர்க‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து இடிபாடுக‌ளி‌ல் ‌‌சி‌க்‌‌கி ‌கிட‌ந்த ரமேஷ் (23), சுப்பிரமணி (19), ஆகிய ோரை ‌கிரே‌ன் மூல‌ம் ம‌ீ‌ட்டன‌ர். உயிருக்கு போராடிய அவ‌ர ்களை வேலூர் அடுக்கம்பாறை அரசு மரு‌த்துவமனை‌‌யி‌ல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவ‌ர்க‌ள் இற‌ந்தன‌‌ர்.

காயம் அடைந்த லாரி டிரைவர் சுப்பிரமண ி, கிளீனர் சரவணன ், பேரு‌ந்து டிரைவர் நாகராஜ் (46) ஆகியோர் வேலூர் அடுக்கம் பாறை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து திருவலம் காவ‌ல்துறை‌யி‌ன‌ர் வழக்கு ப‌தி‌ந்து ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments