Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீ‌ர் ராமரா‌ல் சேது ‌தி‌ட்ட‌ம் ‌பி‌ர‌ச்சனையானது: கருணாநிதி!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (16:31 IST)
திடீரென ராமர் வந்து விட்டதால் சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌ம் பிரச்சினை ஆகி விட்டது எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், ம.தி.மு.க. நிர்வாகி நாஞ்சில் சம்பத் எல்லா பொதுக் கூட்டங்களிலும் என்னை மகா மட்டமாக விமர்சித்து பேசி வருகிறார். இதுபற்றி பல தடவை எனக்கு புகார்கள் வந்தன. சட்டத்துறையில் இருந்தும் அவர் பேச்சு பற்றிய கோப்புகள் வந்தன. ஆனால் நான் அவற்றை எல்லாம் அலட்சியப்படுத்துக என்று குறிப்பு எழுதி நிராகரித்து விட்டேன் எ‌ன்றா‌ர்.

இந்த நிலையில் 24.10.07 அன்று வத்தலகுண்டு நகரில் நடந்த ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிய போது என்னை மிகவும் கேவலமாக பேசி இருக்கிறார். இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டு கலவரம் நடந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர் எ‌ன முத‌ல்வ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கலாட்டாவில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீதும் புகார் கூறப்பட்டது. வேடச்சந்தூர் ம.தி.மு.க. செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் 100 தி.மு.க.வினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாஞ்சில் சம்பத் பேச்சை எல்லா கட்சித்தலைவர்களுக்கும் அனுப்பி உள்ளோம் எ‌ன்று முத‌ல்வ‌ர் மேலு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நாஞ்சில் சம்பத் மதுரை ஜெயிலில் தாக்கப்பட்டுள்ளதாக வைகோ கூறி உள்ளாரே? எ‌ன்ற கே‌ள்‌‌வி‌‌க்கு முத‌ல்வ‌ர் ப‌தி‌ல் அ‌ளி‌க்கை‌யி‌ல், வைகோதான் அப்படி கூறுகிறார். யாரும் தாக்கியதாக தெரியவில்லை. இது தொடர்பான இலாகாவிடம் விசாரித்த போதும் நாஞ்சில் சம்பத் தாக்கப்பட வில்லை என்று கூறினார்கள். என்றாலும் அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் எ‌ன்றா‌ர்.

சேது சமுத்திர திட்டம் நிச்சயம் வரும் என்று டி.ஆர்.பாலு சொல்கிறார். வராது என்று ஜெயலலிதா சொல்கிறார். இந்த நிலையில் கமிட்டி அமைத்ததால் ஏதாவது பயன் இருக்குமா? எ‌ன்று கே‌‌ட்டத‌ற்கு, எப்படி அது பயன் இல்லாமல் போகும ்.6- வது பாதை சரியா அல்லது சரி இல்லையா என்று அந்த கமிட்டியில் கருத்து சொல்ல முடியுமே. வாஜ்பாய் போன்ற அறிவா ளிகள் தேர்வு செய்த வழிதான் இந்த 6-வது வழி. பா.ஜ.க. அமைச்சர்களும் இதை ஆதரித்தனர் எ‌ன்று முத‌‌ல்வ‌ர் ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.

மேலு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், திடீரென ராமர் வந்து விட்டதால் பிரச்சினை ஆகி விட்டது. கிருஷ்ணா நீர் நமக்கு வேண்டாம் என்று சொல்கிறோமா? இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி இந்த திட்டத்தை கெடுப்பதை அந்த திட்டத்தினால் மிகுந்த பயனை எதிர்பார்க்கும் மக்கள் இழக்கத் தயாராக இல்லை எ‌‌ன்றா‌ர் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments