Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடுபனியில் மூழ்கியது திம்பம் ஊர்ந்து சென்றது லாரிகள்

-எமது ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (11:57 IST)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மற்றும் ஆசனூ‌ர் மலைப்பகுதி. இங்குகடந்த சிலநாட்களாக பெய்துவரும் பலத்த மழையினால் இப்பகுதியில் கடுமைய ா ன மூடுபனி ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திம்பம் மற்றும் ஆசனூ‌ர் மலைப்பகுதியில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக திடீர், திடீரென மழைபெய்து வருவதால் இப்பகுதியில் இரவு நேரத்தில் கடுமையான குளிர் ஏற்பட்டுள்ளது. மாலை ஆறு மணிக்கு மேல் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர்.

webdunia photoWD
மேலும் பகல் நேரத்தில் முழுவதும் திம்பம் மற்றும் ஆசனூ‌ர் மலைப்பகுதியில் கடும் மூடுபனி ஏற்பட்டு வருகிறது. திம்பம் கொண்டை ஊசி வளைவில் இந்த மூடுபனியால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கிறது.முகப்பு விளக்கு போட்டுக்கொண்டு வாகனங்கள் செல்கிறது.

இந்த அடை மழையின் காரணமாக வனப்பகுதிக்குள் இருக்கும் மான், காட்டெருமை, செந்நாய்கள் மற்றும் காட்டுயானைகள் ரோட்டின் ஓரத்திற்கு வந்து நிற்கிறது.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments