Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேனக்கல்லில் குளிக்க தடை!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (16:12 IST)
கன மழை காரணமாக ஒகேன‌க்க‌ல்லு‌க்கு ‌நீ‌ர்வர‌த்து அ‌திக‌‌ரி‌த்து‌ள்ளதா‌ல் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் கு‌ளி‌‌க்க தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழகத்தில ் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனா‌ல் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதையில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வந்து அடைந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இன்று காலை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. வினாடிக்கு 48 ஆயிரத்து 123 கன அடிநீர் வந்து கொண்டு இரு‌க்‌கிறது. அணை‌யி‌ல் இரு‌ந்து 1200 கனஅடி த‌ண்‌ணீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதா‌ல் ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. இன்று அணையின் நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்தது.

காவிரி டெல்டா பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதா‌ல் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments