Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ல் குவிண்டாலுக்கு ரூ.1000 வழங்க அரசு முய‌ற்‌சி : அமைச்சர் உறு‌தி!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (16:51 IST)
நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் ‌ விலைய ை கு‌வி‌ண்டாலு‌க்க ு ர ூ.1000 ‌ நி‌ர்ணய‌ம ் செ‌ய்ய‌க ் கோ‌ர ி ம‌த்‌தி ய அரசு‌க்க ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கடித‌ம ் எழு‌தியு‌ள்ளா‌ர ். தொட‌ர்‌ந்த ு இத‌ற்கா ன முய‌ற்‌சிகள ை அரச ு எடு‌க்கு‌ம ் எ‌ன்ற ு ச‌ட்டசபை‌யி‌ல ் அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு கூ‌றினா‌ர ்.

சட்டசபையில் இன்று பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நெல்லின் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.1000மாக உயர்த்த கோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன‌ர ்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ. வேலு கூறுகை‌யி‌ல ், விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதிக நெல் உற்பத்தி செய்யும் தஞ்சை, திருச்சி போன்ற மாவட்ட விவசாயிகளே தாங்கள் உற்பத்தி செய்யும் நெல் முழுவதையும் தமிழக அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கிறார்கள். 95 ‌விழு‌க்காட ு பேர் ரேஷன் கடை களில் விற்கப்படும் அரிசி கிலோ ரூ.2 என்பதால் வாங்குகிறார்கள் எ‌ன்றா‌ர ்.

கடந்த ஆண்டு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.650 என்று இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.675 ஆக மத்திய அரசு நிர்ணயித்தது. உடனே முதலமைச்சரின் அறிவுரைப்படி கடந்த 9ஆ‌ம ் தேதி விவசாயத்துறை அமை‌ச்ச‌ர ் சரத்பவாரை நேரில் சந்தித்து நெல் கொள்முதல் விலையை மேலும் உயர்த்துமாறு கேட்டுக் கொண்டேன் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் வேல ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அதன்படி மத்திய அரசு குவிண்டாலுக்கு மேலும் 50 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குவிண்டாலுக்கு ரூ. 725 கிடைக்கும். என்றாலும் கோதுமை கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த 1ஆ‌ம ் தேதி முதல் குவிண்டாலுக்கு ரூ. 1000மாக அறிவித்து உள்ளது எ ன அமை‌ச்ச‌ர ் கூ‌றினா‌ர ்.

எனவே முதலமைச்சர் கருணாநிதி கடந்த 17ஆ‌ம ் தேதி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். நெல்லுக்கும் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.1000 நிர்ணயிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இதற்கான முயற்சிகளை அரசு எடுக்கும் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு உறு‌திப ட கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments