Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவரு‌க்கு இரு வா‌க்காள‌ர் அ‌ட்டை-தகவ‌ல் த‌ந்தா‌ல் நடவடி‌க்கை: நரேஷ் குப்தா!

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2007 (11:56 IST)
'' ஒரே நபர் இரு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் அது பற்றி தகவல் தெரிவ ி‌ த்தா‌ல ் நடவடிக்கை எடுக்கப்படும ்'' என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்த மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கோவை உள்ளிட்ட 7 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம ் கோவையில் நரேஷ் குப்தா தலைமையில் நே‌ற்ற ு நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம ் அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆ‌ம ் தேதி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவம்பர் முதல் வாரத்தில் துவங்கி ஜனவரி 10ஆம் தேதி முடிவடையும் எ‌ன்றா‌ர ்.

இதுவரை 93 சதவீதம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எ‌ன்ற ு நரே‌ஷ ் கு‌ப்த ா கூ‌றினா‌ர ்.

ஒரே நபர் இரு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் அது பற்றி தகவல் தெரிவ ி‌ த்தா‌ல ் நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் அவர் ஒரு இடத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும். இரு முகவரிகளில் வாக்காளர் அட்டை வைத்திருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும ். வேறு பயன்பாட்டிற்கு வாக்காளர் அட்டையை பயன்படுத்தினாலும் அது போலியானதாக இருந்து தகவல் தந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எ ன தலைம ை தே‌ர்த‌ல ் அ‌திகா‌ர ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கக் கோரி 12.71 லட்சம் மனுக்கள் வந்தன. அவற்றில் பரிசீலனைக்குப் பின்னர் 9.21 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதன் மூலம் கூடுதலாக 2.37 சதவீதம் வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர் எ‌ன்ற ு நரே‌ஷ ் கு‌ப்த ா கூ‌றினா‌ர ்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு செய்தது தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இது குறித்து கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார் நரேஷ்குப்த ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments