Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் பால‌த்தை எ‌‌ன்ன ‌விலை கொடு‌த்தாலு‌ம் பாதுகா‌ப்போ‌ம்: ராம கோபாலன்!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (15:38 IST)
'' இந்துக்களின் நம்பிக்கையான ராமர் பாலத்தை எந்த விலை கொடுத்தாவது பாதுகாப்போம ்'' எ‌ன்று இ‌ந்து மு‌ன்ன‌ணி ‌‌நிறுவன தலைவ‌ர் ராமகோபால‌ன் கூ‌றினா‌ர்.

சேது சமுத்திர திட்டப் பிரச்சினையில் தி.மு.க. அமைச்சர்கள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தை மீறி செயல்படுவது கண்டிக்கதக்கது. இந்து கடவுள்களை மட்டும் விமர்சித்துவரும் முதலமைச்சர் கருணாநிதி, உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற உத்தரவுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு ம‌ற்று‌ம் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவனுக்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன் எ‌ன்று ராமகோபாலன் கு‌றி‌ப்‌‌பி‌ட்டா‌ர்.

இந்துக்களின் நம்பிக்கையான ராமர் பாலத்தை எந்த விலை கொடுத்தாவது பாதுகாப்போம். இதற்காக அடுத்த மாதம் 12ஆ‌ம் தேதி முதல் 26ஆ‌ம் தேதி வரை ராமர் பாலம் தர்மயுத்த தொண்டர்களை அணி திரட்டுவோம் எ‌ன்று ராம கோபால‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தென்காசியில் நடந்த கொலை சம்பவங்களில் உண்மையை போலீசார் மூடி மறைக்கிறார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடவேண்டும். பாண்டிச்சேரி மாநில பெயர் புதுச்சேரி என்று மாற்றப்பட்டுள்ளது. அதை திரும்பபெற்று வேதபுரி என்ற தொண்மையான பெயரை சூட்டவேண்டும் ராம கோபால‌ன் கே‌‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments