Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தி வனப்பகுதியில் காட்டு எருமைகள் அதிகரிப்பு

-ஈரோடு வேலுச்சாமி

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (12:42 IST)
சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் காட்டு எருமைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது.

இந்த வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருக்கும் உணவுகளை உட்கொண்டுவிட்டு வனப்பகுதிக்குள் இருக்கும் குளம், குட்டைகளில் தண்ணீர் குடித்துவிட்டு வாழ்ந்து வருகிறது.

சத்தியமங்கலம் வனப்பக ுத ியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக காணப்பட்டது. குறிப்பாக பண்ணாரியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள வனக்குட்டையில் நாள்தோறும் சுமார் 50 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தண்ணீர் குடித்து சென்றதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இதேபோல் ஆ சன ூர் பகுதியிலும், கடம்பூர் பகுதியிலும் காட்டுயானைகள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக சால ைகளை கடந்து சென்றதையும் காணமுடிந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக காட்டுயானைகள் முதுமலை பகுதிக்கு இடம் மாறியுள்ளது. நவம்பவர் மாதத்தில் மீண்டும் இடம்பெ யர ்ந்த காட்ட ு யானைகள் சத்த ி யமங்கலம் வனப்பகுதிக்கு வந்துவிடும் என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

webdunia photoWD
இந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் கொண்டை ஊசி வளைவிலும், பண்ணாரி பகுதியிலும் காட்டெருமைகள் சாதாரணமா க சாலையின ் ஓரத்தில் நின்ற ு கொண ்டு புல்மேய்ந்து வருவதை தற்போது காணமுடிகிறது.

திம்பம் இன்ஜினியர ் சாலை மற்றும் தலைமலை சால ை பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக காணப்படுகிறது.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments