Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு யானையை விரட்ட "கும்கி' வரவழைக்க திட்டம்

-ஈரோடு வேலுச்சாமி

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (12:39 IST)
சத்தியமங்கலம் பகுதியில் வாகனங்களை விரட்டும் கரும்பு யானையை விரட்ட "கும்கி' யானையை அழைத்து வர வனத்துறையினர் யோசனை செய்து வருகின்றனர்.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் வனப்பகுதியில் இருந்து ஒரு காட்ட ு யானை சால ை ஓரமாக நின்று கரும்பு லாரிக்காக காத்திருப்பது இப்பகுதிய ில ் தினம், தினம் நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது.

இந்த யானையை வனத்துறையினர் கரும்பு லாரி வைத்தே இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளில் அழைத்து சென்று தலைமலை வனப்பகுதியில் சுமார் 20 கி.மீ., தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் விட்டு வந்தனர்.இதனால் இந்த யானை தொந்தரவு இருக்காது என கரும்பு லார ி ஓட்டுநர்கள ் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் அடுத்த நாளே கொண்டை ஊசி வளைவு இரண்டில் நின்றுகொண்டு மீண்டும் கரும்பு லாரிகளை தடுக்கும் பணியை மேற்கொண்டதால் வனத்துறையினர் விரக்தியடைந்தனர்.

பின் பட்டாசு உள்ளிட்டவைகளை கொண்டு வனத்திற்குள் விரட்டினர். இதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் கரும்பு லாரிகள் நிறுத்தப்பட்டது. இதனால் ஓரிரு நாட்கள் காத்திருக்கும் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என எண்ணினர்.

webdunia photoWD
ஆனால் ஒருவாரம் கரும்பு லாரிகள் வராத நிலையில் நாள்தோறும் கரும்பு யானை பண்ணாரி ரோட்டில் நிற்பது தவறாமல் நடந்துவந்தது. நேற்று சால ை ஓரத்தில் நின்ற யானை வாகனங்கள் வரும்போது அவைகளை விரட்டுவதும் வராதபோது சால ை ஓரத்தில் நிற்கும் மரங்களின் கிளைகளை ஒடித்து த ிண்ணுவதுமாக இருந்தது.

இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு வனத்துறையினருக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள் ள ன.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் பயிற்சி யானை அதாவது "கும்கி' யானை இரண்டை பண்ணாரி பகுதிக்கு அழைத்து வந்த ு, " கும்கி' யானைகளின் உதவியால் அடர்ந்த வனப்பகுதியில் கரும்ப ு யானையை விரட்ட வனத்துறையினர் யோசித்து வருகின்றனர்.

இது மக்கனா என்ற வகை யானையாகும். கொம்பு இல்லாத ஆண ் யானையை மக்கனா என்று அழைப்பார்கள். இந்த யானைக்கு சுமார் 15 வயது இருக்கும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments