Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த கட்டணத்தில் அயல் நாடுகளுக்கு பேசலாம் : பி.எஸ்.என்.எல். திட்டம்!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (12:32 IST)
குறை‌ந்த க‌ட்டண‌த்‌தி‌ல் செ‌ல்பே‌சியி‌ல் இரு‌ந்து அயல்நாடுகளு‌‌க்கு பேசு‌ம் ‌பு‌‌திய தி‌ட்ட‌த்தை ‌பி.எ‌ஸ்.எ‌‌ன்.எ‌ல். ‌விரை‌யி‌ல் அ‌றிமுக‌ப்படு‌த்த இரு‌க்‌கிறது.

பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு 'கால் நவ ்' என்ற புதிய சலுகை திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி.டி. குறைந்த கட்டணத்தில் இனி பேசலாம்.

உள்நாடு மற்றும் அய‌ல் நாடுகளுக்கு பேச ரூ.100, ரூ.300, ரூ.500, ரூ.1000, ரூ.2000 ஆ‌கிய கார்டுகளை பயன்படுத்தலாம்.

இந்தியாவிற்குள் பேச ரூ.100, ரூ.300 கார்டுகளுக்கு நிமிடத்துக்கு ரூ.2-ம், ரூ.500, ரூ.1000, ரூ.2000 கார்டுகளுக்கு ரூ.1.50 கட்டணமும் அமெரிக்காவிற்கு பேச ரூ.100, ரூ.300 மதிப்பிலான கார்டுகளுக்கு ரூ.4-ம், ரூ.500, ரூ.1000-க்கு ரூ.3.75ம், ரூ.2000க்கு ரூ. 1.75ம் கட்டணம்.

இங்கிலாந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகள், பிரான்ஸ், ரஷியா போன்ற நாடுகளுக்கு தொடர்பு கொள்ள ரூ.100, ரூ.300 கார்டுக்கு ரூ.4-ம், ரூ. 500-கார்டுக்கு ரூ.3.75-ம், ரூ.1000, ரூ.2000 கார்டுகளுக்கு ரூ.3.25 என குறைந்த கட்டணத்தில் பேசலாம். ஐரோப்பா, இலங்கைக்கு பேச ரூ. 100, ரூ.300க்கு நிமிடத்துக்கு ரூ.6-ம் ரூ. 500க்கு ரூ.5.75ம், ரூ.1000, ரூ.2000-ம் கார்டுகளுக்கு ரூ.5.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளுக்கு பேச இதே போன்று ரூ.100 கார்டுக்கு ரூ.7.45ம், ரூ.300, ரூ.500 கார்டுகளுக்கு ரூ.7-ம், ரூ.1000, ரூ.2000 கார்டுகளுக்கு ரூ. 6.75ம் கட்டணமாகும். ஏனைய உலக நாடுகளுக்கு பேச ரூ.100, ரூ.300 கார்டுக்கு ரூ.9-ம், ரூ.500 கார்டுக்கு ரூ.8.50ம், ரூ.1000, ரூ. 2000 கார்டுகளுக்கு ரூ.8-ம் கட்டணமாகும்.

உள்ளூர், வெளியூர் ம‌ற்று‌ம் அய‌ல் நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பேச "கால் நவ்'' திட்டம் பயனுள்ளதாக இருக்கும். பி.எஸ்.என்.எல்.லில் இருந்து எந்த போனுக்கும் தொடர்பு கொண்டு பேசலாம். நம்ப முடியாத கட்டணத்தில் பி.எஸ். என்.எல். சென்னை டெலிபோன்ஸ் இந்த திட்டத்தை மிக விரைவில் அறிமுகம் செய்ய உ‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments