Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ந‌ீ‌திப‌தி ம‌ீது நாடாளும‌ன்ற‌ம் நடவடி‌க்கை: கி.வீரமணி வ‌லியுறு‌த்த‌‌ல்!

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2007 (15:36 IST)
நீதிபதி மீது நாடாளுமன்றத்தின் வாயிலாக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றம் தன் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் எ‌ன்று ‌திரா‌விட‌ர் கழக தலைவ‌ர் ‌கி.‌‌வீரம‌ணி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

அ.தி.மு.க.வினரால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் முதல் நாள் கொடுத்த ஆணையை தமிழக அரசு மதிக்கவில்லை, நீதிமன்ற அவமதிப்பு நடைபெறுகிறது என்று உண்மைக்கு மாறாகக் கூறப்பட்ட மனுவை விசாரிக்கும்போது, நீதிபதி அகர்வால் என்பவர் தனது எல்லையைத் தாண்டி, அரசியல் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பாக, சில தேவையற்ற கருத்துகளை வாய்மொழி மூலம் கூறி, உச்ச நீதிமன்றத்தை ஒரு அரசியல் மேடையாக ஆக்கியது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும் எ‌ன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

உச்சநீதிமன்ற ஆணைக்கும், மக்கள் உணர்வுகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று தமிழ்நாட்டு மக்கள் அல்லவா தாமே முன்வந்து காட்டியிருக்கிறார்கள். அது தவறாகுமா? அவர்களுக்குள்ள அடிப்படை உரிமை அல்லவா? எ‌ன்று ‌வீரம‌ணி ‌வினவியு‌ள்ளா‌ர்.

பஸ்கள் பெரும் பகுதி ஓடவில்லை என்றால், அதை ஓட்டுபவர்கள் உணர்வு பூர்வமாக அன்று வேலை நிறுத்தம் செய்தார்கள் என்றால் அவர்களை வேலைக்கு வரச்சொல்லி உத்தரவிட்டு கட்டாயப்படுத்த முடியுமா? பணியாளர்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று அழைத்துத்தான் வரமுடியுமா? என ‌‌வீரம‌ணி கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

நீதிமன்றத்தின் ஆணை, பெரும்பாலான மக்களால் மதிக்கப்படவில்லை என்பது எதைக் காட்டுகிறது. உச்ச நீதிமன்றம் மக்களின் உணர்வு களுக்கும், உரிமைகளுக்கும் விரோதமாக இயங்கும் பல நீதிபதிகளைக் கொண்டுள்ளது என்பதைத்தானே அது வெளிப்படுத்துகிறது எ‌ன்று ‌திரா‌விட‌ர் கழக தலைவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

உச்ச நீதிமன்ற பேச்சு வரம்பு மீறியது. அரசை கலைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டா? எந்த சட்ட பிரிவின் கீழ் என கூற முடியுமா? குடியரசு தலைவரின் உரிமையை ஒரு நீதிபதி எடுத்துக் கொள்ளலாமா? நீதிபதி மீது நாடாளுமன்றத்தின் வாயிலாக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றம் தன் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் எ‌ன்று ‌திரா‌விட‌ர் கழக தலைவ‌ர் ‌கி.‌‌வீரம‌ணி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments