Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி வீடு முற்றுகை : இந்து முன்னணி அறிவிப்பு!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (12:59 IST)
இன்னும் 15 நாட்களுக்குள் தனது கருத்துக்கு கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அவரின் வீட்டின் முன் முற்றுகை போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் எ‌ன்று அத‌ன் அமை‌ப்பா‌ள‌ர் முருகான‌ந்த‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்

தமிழகத்தின் முதல மைச்சராக இருக்கும் கருணாநிதி தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும் முதலமைச்சர் ஆவார். ஆனால் தொடர்ந்து இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும், இந்து பழக்க வழக்கங்களையும், இந்து நூல்களையும், இலக்கியங்களையும் இழிவுப்படுத்தி, பேசி அவமானப்படுத்தி வருகிறார். ராமாயணமும் ஒரு நாவல் என்று சொல்லி அவமானப் படுத்தியுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகு‌ம் எ‌ன்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தற்போது ராமர் இல்லை ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூறியுள்ளார். ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கருணாநிதி கேட்கிறாரே. இது ஒரு தகுதியான மனிதர் கேட்கும் கேள்வியா? எ‌ன்று இ‌ந்து மு‌ன்ன‌ணி அமை‌ப்பாள‌ர் ‌வினா எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

தனது கருத்துக்கு இன்னும் 15 நாட்களுக்குள் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அவரின் வீட்டின் முன் முற்றுகை போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் அமை‌ப்பா‌ள‌ர் முருகான‌ந்த‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments