Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாதத்தில் மக்களவைக்குத் தேர்தல் : அத்வானி!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (13:41 IST)
இன்னும் நான்கைந்து மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் வரலாம் என்று பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி கூறினார்.

நெல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பா.ஜ. க. மூத்த தலைவரும ், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அத்வானி பேசுகையில ், மத்திய அரசு சார்பில் ராமர் பிறப்பை பற்றி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அதிர்ச்சியும ், வியப்பும் அடைந்தேன். சிறுபிள்ளைத்தனமாக மனு தாக்கல் செய்திருக்கிறார்கள ். பின்னர் மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரச்சினைக்காக பிரதமர் மன்மோகன் சிங்கும ், சோனியா காந்தியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

முன்பு காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்த போதெல்லாம் அவர்கள் ராம ராஜ்ஜியம் பற்றி எப்போதும் பேசுவார்கள். இப்போது அவர்களுடைய நிலை மாறி இருப்பதால ், காந்தி சமாதியில் உள்ள ’ஹே ராம ்' என்ற வாசகத்தை நீக்கப் போகிறார்கள ா? என்று அத்வானி கேள்வி எழுப்பினார ்

மக்களவைத் தேர்தல் நான்கைந்து மாதங்களில் வரலாம். அதற்காக தொண்டர்கள் தயாராக வேண்டும். நாம் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும் என்று அத்வானி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments