Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவுநீரை நேரடியாக நிலத்தில் விட்ட ஆலைக்கு தடை

-ஈரோடு வேலுச்சாமி

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (10:53 IST)
ஈரோடு அருகே ஆலைக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக நிலத்தில் விட்ட ஜவுளி ஆலையில் உற்பத்தியை நிறுத்தி வ ைக் க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூரில் "சிப்காட்' பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஜவுளி ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் சுற்றுப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர் பெருமளவில் மாசுபட்டுள்ளது.

கழிவை முறையாக சுத்திகரிக்காமல் நேரடியாக வெளியேற்றும் ஆலைகளை கண்காணிக்க இப்பகுதி பஞ்சாயத்து ஊராட்சி தலைவர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இக்குழுவினர் அவ்வப்போது ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஆலை திடக்கழிவை முறையாக அகற்றாமல் குவித்து வைத்திருந்த நிறுவனம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம ் புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்ற ு "சிப்காட்' ஆலைகளில் ஆய்வு நடத ்தப்பட்டது. அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன் ஐந்து அமைச்சர்களை கொண்டு திறப்புவிழா நடத்திய "கங்கோத்ரி' ஜவுளி ஆலையில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக நிலத்தில் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

தண்ணீரை நிலம் உறிஞ்சியவுடன், மண்ணில் படிந்திருக்கும் ரசாயன உப்பை டிராக்டர் மூலம் உழுது வெளித்தெரியாமல் செய்து மறைத்துள்ளனர். இதுபற்றி கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே ஆலையின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments