Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் கேஸ் நிரப்பும் தொழிலாளிகள் வேலை நிறுத்தம்

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (11:37 IST)
பெருந்துறை சமையல் எரிவாயு உருள ை நிரப்பும் ஆலையில் தொழிலாளிகள் துவங்கியுள்ள திடீர் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு, நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில ் எரிவாயு உருளை தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உருளைகளை சிலிண்டர்களில் நிரப்பும் "பாட்லிங் பிளான்ட்' ஆலைகள் சென்னை தண்டையார் பேட்டை, அத்திப்பட்டு, சேலம், பெருந்துறை சிப்காட், கிணத்துக்கடவு, திருச்சி, மதுரை, மன்னார்குடி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு உட்பட 10 இடங்களில் உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள "பாட்லிங் பிளான்ட்'ல் தினமும் 30 ஆயிரம் உருளைகளில ் எரிவாயு நிரப்பப்படுகிறது. அங்கிருந்து அவைகள ் ஈரோடு, நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் கூலி உயர்வு, பணி நிரந்தரம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்களாக உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக எண்ணெய் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் (27ம் தேதி) முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் உருளைகளில் எரிவாயு நிரப்பும் பணி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் சமையல் காஸ் தட்டுப ்பாட ு ஏற்பட வாய்ப்புள்ளது என்று இண்டேன் காஸ் டீலர்கள் கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments