Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் உபரி நீர் பயன்படுத்த திட்டம் : ராமதாஸ்

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2007 (16:13 IST)
நதிநீர் பங்கீட்டில் 30 டி.எம்.சி., தண்ணீருக்கு அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், காவிர ியில் ருந்து உபரி நீராக 200 டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலந்து கொண ்டிருக்கிறத ு என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை வீணக்காமல் சேலம் மாவட்டம் முழுவதும் பாசனத்துக்கு பயன்படுத்த சரியான திட்டமிடக்கோரி பா.ம.க., சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தது.

பேரணியை, பா.ம.க., தலைவர் மணி துவக்கி வைத்தார். பேரணியின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ப ேசுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலம் ந ூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சேலம் மாவட்ட விவசாயத்துக்கு காவிரி நீரை பயன்படுத்த முடிவதில்லை. டெல்டா விவசாயிகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை சேலம் மக்களின் விவசாயத்துக்கு கேட்கவில்லை; உபரியாக கடலில் கலந்து வீணாகும் நீரை மட்டுமே பயன்படுத்த கூறுகிறோம்.

நதிநீர் பங்கீட்டில் 30 டி.எம்.சி., தண்ணீருக்கு அண்டை மாநிலங்களுடன் சண்டை போடும் நிலையில், 200 டி.எம்.சி., தண்ணீர் கடலில் வீணாக கலந்து கொண்டுள்ளது. இதை உடனடியாக தடுக்க வேண்டும். இத்திட்டத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலாவாகும்.

இத்தொகையையும் உலக வங்கியின் மூலம் பெற முடியும். குஜராத் மாநிலத்தில் நர்மதா நதியில் மிக பிரம்மாண்டமாக இத்திட்டத்தை நிறைவேற்றி, 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் செய்யப்படுகிறது.

இத்திட்டத்துக்கு அனைத்து செயல்முறைகளையும் பா. ம.க. தயாரித்துவிட்டது. அதை செயல்படுத்தினால் ஆறு மாதங்களுக்குள் இத்திட்டத்தை முடிக்க முடியும். உடனடியாக தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த நாள் குறிக்க வேண்டும ் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments