Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை - ராமேஸ்வரம் ரயில் சேவை தொடங்கியது

Webdunia
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுரை - ராமேஸ்வரம் இடையேயான அகல ரயில்பாதையில் இன்று முதல் போகுவரத்து தொடங்கியது. மதுரையில் நடைப ெற் ற இதற்கான விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரயில் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார்.

மதுரை - ராமேஸ்வரம் இடையே புதிதாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், இணை அமைச்சர்கள் வேலு, ரத்வா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை மதுரை வந்தடைந்தார்.

அவருடன் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தும் வந்தார். விமான நிலையத்தில் அவர்களை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் வரவேற்றனர்.

விழாவையொட்டி, மதுரை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப் பட்டிருந்தது . 3,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments