கட்டாய ஹெல்மெட்: அரசுக்கு உயர் நீதிமன்றம் தாக்கீது

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2007 (09:32 IST)
கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

சென்னை உள்பட 6 மாநகராட்சிகளில் கடந்த ஜூன் 1 ஆம் தேதியும், பிற மாநகராட்சிகளில் ஜூலை 1ம் தேதியிலிருந்து கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் காவல் துறையினர் அதிக கெடுபிடி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து 'அதிக கெடுபிடி வேண்டாம்' என காவல் துறைக்கு முதலமைச்சர் கருணாநிதி அறிவுரை கூறினார்.

இந்நிலையில், டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய் ஹெல்மெட் சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்தவில்லை என்றும், இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

சிந்து நதிக்கு அடுத்து ரவி நதியும் இல்லை!.. பாகிஸ்தானுக்கு இந்தியா செக்!...

7 வயது சிறுமியை கொன்று பிளாஸ்டிக் பேரலில் சடலத்தை மறைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Show comments