Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பன் அகல ரயில்பாதை : ஆகஸ்ட் 12 ஆம் தேதி திறப்பு

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2007 (09:44 IST)
இராமேஷ்வரம் - மானாமதுரை இடையேயான அகல ரயில்பாதை மாற்றப்பட்டிருக்கிறது. பாம்பன் பாலத்தை உள்ளடக்கிய இந்த அகலப்பாதையில் ரயில் போக்குவரத்து இந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

மண்டபத்திலிருந்து இராமேஷ்வரம் வரையில் கடலின் குறுக்கே பாம்பன் பாலம் அமைந்துள்ளது. 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த வழியாக கப்பல்கள் செல்லும் போது பாம்பன் பாலம் இரண்டாகப் பிரிந்து உயர்ந்து வழி விடும். கப்பல்கள் சென்றவுடன் இணைந்து ரயில் பாதையாக செயல்படும். மானமதுரை - இராமமேஷ்வரம் அகல ரயில் பாதை திட்டத்திற்கு ரூ 200 கோடி செலவிடப்பட்டிருந்தது.

இதில் ரூ24 கோடி பாம்பன் பாலத்திற்கு செலவிடப்பட்டிருந்தது. புதுப்பிக்கப்பட்ட அகல ரயில்பாதையில் மதுரை வழியாக செல்லும் தொடர் வண்டி சென்னையில் இருந்து இராமேஷ்வரத்திற்கு செல்கிறது.

இந்த அகல ரயில்பாதை போக்குவரத்து இம்மாதம் 12 ஆம் தொடங்கப்படுகிறது. இதற்கான விழாவில் காங்கிரஸ் தலைவர் ச ோன ியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி, ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments