Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் கொந்தளிப்பு : மெரீனாவை மூழ்கடித்து திரும்பியது!

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2007 (15:15 IST)
வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கடல் கொந்தளிப்பு இன்று மேலும் அதிகரித்ததன் காரணமாக கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன் சென்னை மெரினா கடற்கரையை மூழ்கடித்து திரும்பியது.

ஜப்பான் கடற்கரை பகுதியில் நேற்று மித நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது. அதேபோல் அமெரிக்க கடற்கரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து, கரையில் இருந்து சுமார் 200 மீ தூரத்திற்கு கடல் அலைகள் வந்து மெரினா கடற்கரையை மூழ்கடித்து சென்றது. இதேபோல், தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட கடல் பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மீனவர்கள் யாரும் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments