தமிழகத்தில் 72 புதிய நீதிமன்றங்கள் : அரசு திட்டம்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2007 (13:48 IST)
இந்தாண்டிற்குள் தமிழகத்தில் புதிதாக 50 அமர்வு நீதிமன்றங்கள் உள்பட 72 நீதிமன்றங்கள் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாலை நேர நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வலியுறுத்தினார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வாடகை கட்டடங்களில் நீதிமன்றங்கள் இயங்கும் நிலை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தமிழக அரசு நீதித்துறைக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு செய்தது. இதில் நடப்பு நிதியாண்டில் நீதிமன்ற கட்டடங்களுக்கும், குடியிருப்புகள் கட்டுவதற்கும் ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் இந்தாண்டிற்குள் புதிதாக 50 அமர்வு நீதிமன்றங்கள் உள்பட 72 நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்வாகதா சொன்ன மியூசிக் டைரக்டர் யாருன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம்!. ஜேம்ஸ் வசந்தன் பகீர்!...

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம்!

கிரெடிட் கார்டு பில் செலுத்த கூடுதல் அவகாசம்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!

கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்யாகும்.. விஜய் தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறார்: செங்கோட்டையன் உறுதி!

15 வருஷம் கத்தியும் ஒருசீட் கூட இல்லையா?.. ஒரு கருத்துக்கணிப்பில் கூட வரலயே!...

Show comments