சுயநிதி மருத்துவக் கல்லூரிக் கட்டணம் : இன்று தீர்ப்பு

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (09:32 IST)
அரசு நிர்ணயித்த ஆண்டுக் கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக் கட்டணமாக ரூ.1,30,000 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று 2004 ஆம் ஆண்டு நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால் செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சில தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அதிகம் கட்டணம் வசூலிப்பதாகவும், இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இக்கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் கொஞ்சம் இறங்கினால் 1 லட்சத்திற்கு கீழே வந்துவிடும் ஒரு சவரன் தங்கம்.. தொடர் சரிவு..!

எனக்கு சீட் கொடுக்காமல் என் மகனுக்கு சீட் கொடுப்பதா? தந்தை பொங்கியதால் திமுக எடுத்த அதிரடி முடிவு..!

பால்டாயில் குடிச்சதெல்லாம் பன்ச் வசனம் பேசுது!.. உதயநிதியை பங்கம் பண்ணிய பழனிச்சாமி...

தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா? ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை

துணிக்கடைக்கு நடிகை வந்தா கூட்டம் கூடும்.. ஆனா துணி எடுக்க மாட்டாங்க!.. விஜயை நக்கலடித்த பழனிச்சாமி!...

Show comments