Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல்: ஷெகாவத்திற்கு அதிமுக வாக்களிப்பு

Webdunia
வியாழன், 19 ஜூலை 2007 (14:19 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்த 3 வது ஆணியில் இடம் பெற்றுள்ள அதிமுக ஷெகாவத்திற்கு ஆதரவாக வாக்களித்துள் ளத ு.

அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாம் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் தேர்தலில் போடியிட மறுத்ததை அடுத்து, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அக்கூட்டணி அறிவித்தது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடும் பைரோன் சிங் ஷெகாவத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது என அதிமுக முடிவு செய்தது.

இன்று காலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் தினகரன், நடிகர் எஸ்.எஸ். சந்திரன், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

அதேபோல் அக்கட்ட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர். அதேபோல் 3 வது அணியில் இடம்பெற்றுள்ள மதிமுக நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களும் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments