Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகள் மோதல் : 7 பேர் பலி 23 பேர் படுகாயம்

Webdunia
புதன், 11 ஜூலை 2007 (10:56 IST)
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு அரசு பேருதுகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவையில் இருந்து சென்னையை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று காலை ஏழு மணி அளவில் பேருந்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே சென்ற போது, சென்னையிலிருந்து ஈரோடு நோக்கி வந்துகொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

எதிர்பாராத இந்த கோர விபத்தில் அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments