Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையை திறக்க:சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 9 ஜூலை 2007 (17:53 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை எட்டியதும் குறுவை சாகுபடிக்காக அணையை திறக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்காக மேட்டுர் அணையை திறக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கறிஞர் பெரியகருப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா, மேட்டூர் அணையின் நீர்மட்டம ், தற்போது 85 அடியாக உள்ளது என்றும், அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்ந்ததும் அணை திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95 அடியாக உயர்ந்ததும் குறுவை சாகுபடிக்காக அணையை திறக்க வேண்டும் என்றும், இதுபற்றிய அறிவிப்பை 10 நாட்களில் அரசு வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments