Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 முதல் 16 வரை மருத்துவ கலந்தாய்வு

Webdunia
புதன், 4 ஜூலை 2007 (11:01 IST)
மருத்து வக் கல்வியில் சேரும் மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு வரும ் 9- ஆம ் தேதி முதல் 16- ஆம ் தேதி வரை நடைப ெற உள்ளது.

மருத்துவ கல்வியில் சேரும் மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு முடிவடைந்து வரும் 9 ஆம் தேதி மருத்துவத்திற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம ் கூறியதாவத ு, இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேரும ் ம ாணாக்கர்களுக்கா ன கலந்தாய்வுக் கூட்டம், ஜுலை 9-ந் தேதியில் இருந்து ஜுலை 16-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 3 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு அனுமதி கிடைத்ததும் உரிய மாணவர்களை சேர்த்துக்கொள்வோம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.4 லட்சமாக நிர்ணயித்துள்ளன. இது தொடர்பாக ஆய்வு செய்ய அரசு அமைத்த ராமன் ஆணையத்தின ் ஆயுள் இந்த மாதம் முடிகிறது. அந் த ஆணையம ் தனது ஆய்வறிக்கையை ஓரிரு நாளில் சமர்ப்பிக்கும். அதில ், அதிக கட்டணக் குறைப்ப ு பர ிந்துரைக்கப்பட ்டால ் அதனை பின்பற்றுவோம். கட்டணக் குறைப்பு அதிக அளவில் செய்யப்படவில்லை என்றால் மேல்முறையீடு செய்வோம்.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம். முதுகலை மருத்துவப் பிரிவுகளில் இன்னும் கூடுதல் பாடங்களை சேர்க்க இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்துவிட்டு வெளியேறும் எம்.பி.பி.எஸ். மாணவர்கள், கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள் ளது என்று அமைச்சர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments