Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (10:51 IST)
பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று மாலை வெளியிட்டது.

இதில் ஒரு மாணவி உட்பட 6 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனர்.

தமிழ்நாட்டில் 250 அரசு மற்றும் தனியார் பொறியியல ் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கு இந்த ஆண்டு முதல் நுழைவுத்தேர்வு கிடையாது.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று மாலையே தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

அண்ண ா பல்கலைக்கழக வளாகத்தில் தரவரிசைப் பட்டியலை அமைச்சர் பொன் முடி வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், பொறியியல் கலந்தாய்விற்க ு 94,960 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 90,803 பேரின் விண்ணப்பங்கள் தகுதி உடையவையாகும ். 4,157 பேர் விண்ணப்பங்கள் சரியாக இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மருத்த ுவ படிப்பிற்கான கலந்தாய்வ ு முடிந்த மறு நாள் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். காரணம் மருத்துவம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் சே ர வசதியாக இருக்கும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments