Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் கூடுதலாக 1,600 மெகாவாட் மின் உற்பத்தி!

Webdunia
புதன், 27 ஜூன் 2007 (13:21 IST)
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தேவையையும் தாண்டி 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருவதாக தமிழக மின் வாரியம் கூறியுள்ளது!

தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி 10,098 மெகாவாட் என்றும், அதில் தமிழ்நாட்டின் தேவை இன்றைய நிலையில் 8,500 மெகாவாட்டாக மட்டுமே இருப்பதால் உபரியாக உள்ள 1,598 மெகாவாட் மின்சாரத்தை மராட்டியம், பஞ்சாப் மாநிலங்களுக்கு தமிழக மின் வாரியம் விற்று வருவதாக தமிழக மின் வாரியம் கூறியுள்ளது.

தமிழக மின் வாரிய அதிகாரிகள் அளித்துள்ள புள்ளி விவரப்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரை உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பஞ்சாபிற்கும், மராட்டியத்திற்கும் யூனிட்டிற்கு ரூ.5.02க்கு விற்கப்படுவதாகவும், இதன்மூலம் கடந்த நிதியாண்டில் தமிழக மின் வாரியம் ரூ.273 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹரியானா மாநில மின் வாரியத்துடன் தமிழக மின் வாரியம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்றும், அதன்படி தமிழ்நாட்டின் கோடைக்காலமான பிப்ரவரி முதல் மே வரையிலான 4 மாதங்களில் ஹரியானாவிடம் இருந்து 300 மெகாவாட் மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டு, அதனை 105 விழுக்காடாக அடுத்த 4 மாதங்களில் ஹரியானாவிற்கு திருப்பித் தந்து வருகிறது என்றும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காற்றாலைகளின் வாயிலாக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments