Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் : ரயில் சேவை பாதிப்பு

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2007 (13:56 IST)
மின்சார ரயில் ஓட்டுநர்கள் இருவரை தென்னக ரயில்வே நிர்வாகம் பணி இடை நீக்கம் செய்ததை கண்டித்து ரயில் ஓட்டுநர்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் புறநகர் ரயில் சேவை ஸ்தம்பித்தது.

ஓட்டுநர் விதிமுறைகளை மீறியதாகக் கூறி மின்சார ரயில் ஓட்டுநர்கள் 2 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்களுடைய பணி இடை நீக்கத்தை திரும்பப் பெறுமாறு ரயில்வே நிர்வாகத்தை ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ரயில்வே நிர்வாகம் சம்மதிக்காததை அடுத்து இந்த திடீர் வேலை நிறுத்தம் நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த திடீர் வேலை நிறுத்தத்தால் சென்னை சென்ட்ரயில் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்கங்களில் செல்லும் புறநகர் ரயில் சேவை முற்றிலுமாக நின்றுவிட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிப்பிற்குள்ளாயினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments