Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2007 (11:43 IST)
வங்க கடலில் மீண்டும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும ், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது. இந்நிலையில், வங்க கடலின் வடமேற்கு பகுதியில் ஒரிசாவிற்கு அருகில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

இது புயல் சின்னமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய ம ாந ிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் விசாகப்பட்டிணம் வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்திற்கு எந்த விதபாதிப்பும் இல்லை என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments