Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை முன்னாள் மேயர் கார் எரிப்பு: அதிமுக.வினர் மீது வழக்கு பதிவு

Webdunia
புதன், 20 ஜூன் 2007 (17:00 IST)
மதுரை முன்னாள் மேயர் குழந்தைவேலு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டாடா சுமோ கார் தீப்பிடித்து எரிந்தது. மேலும், அவரது வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

மதுரை மேற்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, மதுரை முன்னாள் மேயர் குழந்தை வேலு 11 வது வார்டு திமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் குழந்தை வேலுவின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அவர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டாடா சுமோ கார் தீப்பிடித்து எரிந்து கிடந்தது. வீட்டின் ஜன்னல்கள் நொறுக்கப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தை வேலு, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். இடைத்தேர்தலை சீர் குலைக்கவும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவும் அதிமுகவினர் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், வ.து. நடராஜன் உள்பட 8 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments