Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஐ.டி. ஆய்வுப் பூங்கா : தமிழக அரசு 11 ஏக்கர் நிலம் அளிப்பு!

Webdunia
சென்னை அடையாறில் இயங்கிவரும் இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூ.100 கோடி செலவில் அமைக்கவுள்ள தொழில்நுட்ப பூங்காவிற்கு தமிழக அரசு 11 ஏக்கர் நிலம் அளித்துள்ளது!

இத்தகவலை வெளியிட்ட சென்னை ஐ.ஐ.டி., ஆய்வுப் பூங்கா அமைப்பதற்கான திட்டமும், அதற்கான நிதியும் தயாராக உள்ளதெனவும், இன்னும் சில மாதங்களில் திட்டப் பணிகள் துவங்கும் என்றும் கூறியுள்ளது.

வங்கிகளில் இருந்து பெறப்படும் நிதியுதவி மட்டுமின்றி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இந்த ஆய்வுப் பூங்காவிற்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மசாசூசட்ஸ், ஸ்டாண்ட்ஃபோர்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் உள்ள ஆராய்ச்சிப் பூங்காக்களைப் போல திட்டமிடப்பட்டுள்ள ஐ.ஐ.டி. ஆய்வுப் பூங்கா, இங்கு தங்களுடைய ஆய்வுக் கூடங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு சில முன் நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் ஒன்று, அந்நிறுவனங்களின் ஆய்வுக் கூடங்களில் பயிற்சி பெற்றிடவும், பயிற்றுவித்திடவும் ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதாகும்.

இந்த ஆய்வுப் பூங்காவில் இடமளிக்கப்படும் நிறுவனங்கள் தங்களுடைய ஆய்வுக் கூடங்களை மட்டுமே நிறுவிக் கொள்ளலாம். விற்பனை அலுவலகங்கள் போன்ற எந்த வணிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்பது மற்றொரு முன் நிபந்தனையாகும். (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments