Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்: கருணாநிதி

Webdunia
தமிழ் ஆட்சி மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுவே தன்னுடைய பிறந்த நாள் விரும்பம் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதியின் 84 - வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று காலை முதலமைச்சர் கருணாநிதி அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் நடந் த மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் அவர் தொடங்கிவைத்தார்.

பின்னர், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வுகாண தென்னக நதிகளை இணைக்ககோரி பிரதாமர் மன்மோகன் சிங்கிடம் தாம் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

நதிகள் இணைக்கப்பட வேண்டும், மத்தியில் தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும் என்பது தமது நீண்ட நாள் ஆசை என்றும், இதுவே தமது பிறந்த நாள் விருப்பம் என்றும், கூறிய முதலமைச்சர் கருணாநிதி இதற்கான முயற்சியில் ஈடுபட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments