Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டட விதிமுறை மீறல் : உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு!

Webdunia
சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 75,000க்கும் அதிகமான கட்டடங்களை இடிப்பதை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றத்தை நாடுவது என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது!

சென்னையில் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகளும் வணிக ரீதியிலான கட்டடங்களும், வீடுகளும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளன. அவைகளை வறைமுறைப்படுத்த தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்தின் பிரிவு 133-எ திருத்தப்பட்டு அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது.

விதிமுறையை மீறி கட்டப்பட்ட ஒவ்வொரு சதுர அடிக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்து அவைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஆணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பிறப்பித்த ஆணையை செல்லாது என்று அறிவித்தது.

இந்த நிலையில் இது குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

" சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதற்கு தமிழக அரசு உருவாக்கிய திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், பல மாடிக் கட்டடங்கள் என சுமார் 75,000 கட்டடங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பெருமளவு சேதாரத்தை உருவாக்கக் கூடிய சூழ்நிலையைத் தவிர்த்திடும் முயற்சியாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தினை அணுகி மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என்றும், இதற்கிடையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நிபுணர் குழு அமைத்து நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது என்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments