Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சராக ராதிகா செல்வி பதவியேற்றார்

Webdunia
தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா செல்வி மத்திய அமைச்சராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு உள்துறை இணை அமைச்சருக்கான இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தயாநிதி மாறன் வகித்து வந்த இலாகா தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் ராசாவுக்கு ஒதுக்கப்பட்டது.

மேலும் திருச்செந்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா செல்விக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடந்த எளிய விழாவில் ராதிகா செல்வி மத்திய அமைச்சராக பதவி ஏற்க்கொண்டார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதம் மன்மோகன் சிங் காங்கி ர ° தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராதிகா செல்விக்கு இலாகா எதுவும் ஒதுக்கப்படவில்லை. அவருக்கு மத்திய உள் துறை இணை அமைச்சர் இலாகா பொறுப்பு இன்று மாலை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments