Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த கூட்டம் வரை கவாஸ்கர் நீடிப்பார்

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (12:47 IST)
ஐ.சி.சி. உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்டம் நடைபெறும் வரை கவாஸ்கர் ஐ.சி.சி. கிரிக்கெட் குழு தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. கிரிக்கெட் குழு தலைவராக இருந்து கொண்டு வர்ணனையாளராகவும், பத்தி எழுத்தாளராகவும் இரட்டை பணியில் கவாஸ்கர் ஈடுபடுவது குறித்து துபாயில் நடந்த ஐ.சி.சி. செயற்குழு கூட்டத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டது.

ஆனால் இந்த விவகாரம் குறித்து மால்கம் ஸ்பீடுடன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இதனால் உடனடியான நடவடிக்கை ஏதும் இல்லை என்று தெரிகிறது.

ஐ.சி.சி ஆண்டுக் கூட்ட வாரத்தில் உய‌ர்மட்டக் குழு இந்த விவகாரத்தை மீண்டும் விவாதிக்க உள்ளது. ஐ.சி.சி. கிரிக்கெட் குழுக் கூட்டம் வரும் மே மாதம் 5, 6ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. ஐ.சி.சி. ஆண்டு கூட்ட வார‌ம் ஜூன் 29, ஜூலை 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அதுவரை கவாஸ்கர் ஐ.சி.சி. பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

Show comments