Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டால்மியா கைது! பிணையில் விடப்பட்டார்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (16:06 IST)
நிதி முறைகேடுகள் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா இன்று கைது செய்யப்பட்டு பிறகு உடனடியாக பிணையில் விடப்பட்டார்.

மும்பை காவல்துறை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் தன் வழக்கறிஞர்களுடன் காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியா முன் ஆஜரானார் டால்மியா.

ஆனால் டால்மியா ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கிற்காக முன் ஜாமின் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

1996 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நடத்திய உலக் கோப்பை போட்டிகளின்போது ‌கிடை‌த்த ரூ.2.9 கோடி தொகையை முறைகேடு செய்திருப்பதாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்ற விசாரணைப் பிரிவு டால்மியா மீது குற்றம்சாட்டியது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 16ஆம் தேதி மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

Show comments