Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேரல் ஹேர் மீண்டும் ஐ.சி.சி நடுவர் குழுவில்

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (11:04 IST)
ஐ.சி.சி. உயர்மட்டக்குழுவிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹேர் மீண்டும் ஐ.சி.சி.யில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான சர்ச்சைக்குரிய டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐ.சி.சி உயர் மட்டக் குழுவிலிருந்து டேரல் ஹேர் தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த சர்ச்சையின் போது, மற்றொரு நடுவரான பில் டாக்ட்ரோவ் கறுப்பரினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தண்டனையிலிருந்து தப்புவிக்கப்பட்டதாகவும், தான் வெள்ளையர் என்பதால் ஆசிய ஆதிக்க ஐ.சி.சி தன்னை நிற பேத அடிப்படையில் வெளியேற்றியது என்றும் செய்திருந்த புகாரை டேரல் ஹேர் விலக்கி கொண்டார்.

இந்த காலக் கட்டத்தில் ஐ.சி.சி உறுப்பு நாடுகளில் முக்கிய அணிகள் பங்கேற்கும் முக்கிய சர்வதேச போட்டிகளில் டேரல் ஹேர் நட்வர் பொறுப்பு வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டேரல் ஹேர் தங்களது போட்டிகளுக்கு நடுவர் பொறுப்பில் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாக தெரிகிறது.

பாகிஸ்தானின் இந்த கசப்பான எதிர்வினைக்கு நேர் எதிராக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா, டேரல் ஹேர் மீண்டும் நடுவர் பொறுப்பில் சேர்க்கப்பட்டது குறித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments