Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாக்கி: பிரிட்டனிடம் இந்தியா தோல்வி

Webdunia
சிலி நாட்டின் சாண்டியாகோவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஹாக்கி தொடரில் பிரிட்டனிடம் இந்தியா 2- 3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. இதனால் பிரிட்டன் அணி இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்த வெற்றி மூலம் 4வது வெற்றியை ஈட்டியுள்ளது பிரிட்டன். இந்தியா 3 வெற்றிகள் ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகளுடன் உள்ளது.

வரும் சனிக்கிழமையன்று சிலி அணியை இந்தியா வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும். ஞாயிறன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணியே 2008 பீஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆட்டம் துவங்கிய 2வது நிமிடத்தில் இந்தியாவின் பெனால்டி கார்னர் நிபுணர் ராமச்சந்திர ரகு நாத் முதல் கோலை அடித்து முன்னனி பெறச் செய்தார்.

அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை இரு அணிகளும் விளையாடின. இதனால் 15வது நிமிடத்தில் பிரிட்டன் வீரர் ரிசர்ட் மேன்டெல் ஒரு கோலை அடித்து சமன் செய்தார். பிறகு ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் பிரிட்டன் வீரர் ஜான்டி கிளார்க் ஒரு கோலை அடித்து தன் அணிக்கு 2- 1 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.

பிறகு ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பிரிட்டன் வீரர் ராப் மூர் வெற்றிக்கான கோலை அடித்தார்.

முதலில் பெற்ற முன்னிலையை தக்க வைக்கத் தவறிய இந்திய அணி, மைதானத்தில் ஆடிய ஆட்டமும் சர்ச்சைக்குள்ளானது. இடைவேளைக்கு முன்னரே முறையற்ற ஆட்டத்திற்காக 2 முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இந்திய வீரர்கள் விக்ரம் காந்த், ஷிவேந்திர சிங் ஆகியோர் எதிரணியினரை உடல் ரீதியாக எதிர்கொண்ட இரண்டு சந்தர்ப்பங்களில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments