Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேசன் கில்லெஸ்பி ஓய்வு

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (10:56 IST)
ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது குவீன்ஸ்லாந்து அணியுடன் நடைபெறும் புரா கோப்பை உள் நாட்டுக் கிரிக்கெட் போட்டி அவரது கடைசி போட்டி என்று அவர் கூறியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்வை துவங்கிய கில்லெஸ்பி, 71 டெஸ்ட் போட்டிகளில் 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது டெஸ்ட் பந்து வீச்சு சராசரி 26.13. 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹெடிங்லியில் நடைபெற்ற டெஸ்டில் ஒரு இன்னிக்சில் 37 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்தை சாய்த்தார்.

கடைசியாக இவர் ஆஸ்ட்ரேலிய அணிக்காக வங்கதேசத்தில் ஆடியபோது இரட்டை சதம் அடித்து அனைவரையும் ஆச்ச‌ரியப் பட வைத்தார்.

ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் தனது தனிச்சிறப்பான பந்து வீச்சினால் உலக பேட்ஸ்மென்களை திணற அடித்த கில்லெஸ்பி 97 ஒரு நாள் போட்டிகளில் 142 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

காயம் காரணமாக 1999 மற்றும் 2003 உலகக் கோப்பைகளில் இவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சி.சி.ஐ-யை எதிர்த்து துவங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் லீகில் இவர் விளையாடுவார் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Show comments