Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது ஒரு நாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (11:55 IST)
டர்பன் நகரில் நேற்று நடைபெற்ற 4வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மேற்கிந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 4- 0 என்று முன்னிலை வகிக்கிறது.

பூவா தலையா வென்ற மேற்கிந்திய அணி முதலில் பேட் செய்தது. துவக்க வீரர்கள் பார்ச்மென்ட் மற்றும் சாட்டர்கூன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர் இருவரும் இணைந்து 23 ஓவர்களில் 97 ரன்களை சேர்த்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

ஆனால் அதன் பிறகு இருவரும் தங்களது சொந்த எண்ணிக்கையான 48 ரன்களில் ஆட்டமிழக்க, சந்தர்பால்(28) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிராவோ, சம்மி ஆகியோர் வீழ்ந்து விட மேற்கிந்திய அணி 167/6 என்று சரிந்தது.

ஆனால் அதன் பிறகு பிரவுனும் லூயிஸும் இணைந்து 3 ஓவர்களில் 33 ரன்களை விளாசினர். 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர் உதவியுடன் பிரவுன் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 206/9 என்று இருந்த மேற்கிந்திய அணி ஜெர்மி டெய்லர், ஃபிடல் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டுக்காக 6 ஓவர்களில் சேர்த்த 57 ரன்களால் தலை நிமிர்ந்தது.

டெய்லர் 21 பந்துகளில் 43 ரன்களை 5 பவுண்டரிகள் 2 சிக்சர் சகிதம் எடுத்தார். 50 ஓவர்களில் மேற்கிந்திய அணி 263/9.

தென் ஆப்பிரிக்க அணியில் போலாக், மற்றும் நெல் சிக்கனமாக வீசி தங்களி‌ன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர் போத்தா சிறப்பாக வீசி முக்கியமான சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தினார். மகாயா நிடினி 9 ஓவர்களில் 80 ரன்களை கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பதோடு கடைசி ஓவரில் 24 ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஜெர்மி டெய்லரின் 2வது பந்திலேயே ஸ்மித் கொடுத்த கேட்சை கல்லியில் நின்று கொண்டிருந்த ஃபீல்டர் தவற விட்டார். இதற்கான பலனையும் அடைந்தனர். ஸ்மித் 26 பந்துகளில் அரை சதம் விளாசினார். 12 வது ஓவரில் 77/1 என்று இருந்த தென் ஆப்பிரிக்கா அதன் பிறகு சரணடைய விரும்பவில்லை. கிப்ஸ்(39), காலீஸ் (1) ஆகியோர் மோசமான ஷாட் தேர்வுக்கு அடுத்தடுத்து பலியான பின்பும் தென் ஆப்பிரிக்கா விட்டுக் கொடுக்கவில்லை.

டிவிலியர்ஸ்(77), டுமினி (44) போலாக்(21),பவுச்சர் (21) ஆகியோரின் ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments