Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்பஜன் விவகாரத்தில் புதிய திருப்பம்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (12:23 IST)
ஹர்பஜன் மீதான நிறவெறிக் குற்றச்சாட்டு தொடர்பான தடை விதிப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை செய்யவுள்ள நியூசிலாந்து நீதிபதி ஸ்டம்புகளுக்கு அருகில் உள்ள ஒலி வாங்கி மூலம் பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் புதிய சாட்சியமாக ஏற்கப்படும் என்று கூறியதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கமுடியாது என்று மறுத்துள்ளது.

ஹர்பஜன் மேல்முறையீட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட நியூசிலாந்து நீதிபதி ஹான்சென் விசாரணைக்கான வழிமுறைகள் பற்றி இன்று கூறியபோது கூடுதல் சாட்சியங்கள், அதாவது ஸ்டம்புகளுக்கு கீழ் பொருத்தப்பட்டுள்ள ஒலி வாங்கி மூலம் பதிவான உரையாடல்களையும் சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்போவதாக கூறியது இந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டம்பு ஒலி வாங்கி உரையாடல்களை எளிதில் மாற்றி அமைத்து விடலாம் அல்லது திரிக்கப்படலாம், எனவே இதனை புதிய சாட்சியாக ஒரு போதும் ஏற்கமட்டோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஐ.எஸ்.பிந்ரா கடந்த ஒரு வாரமாக ஆஸ்ட்ரேலியாவில் தங்கி, ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவருடன் ஹர்பஜன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார்.

ஹர்பஜனுக்கு தடை விதித்தால் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்கவியலாது என்று அச்சுறுத்தியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Show comments