Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறவெறிக் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல-கிரிக்கெட் வாரியம்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (19:19 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீது நிறவெறியுடன் வசைபாடியதாக குற்றச்சாற்று கூறி அதன் அடிப்படையில் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் விளையாடக் கூடாது என்று ஐசிசி நடுவர் விதித்த தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியாயமற்றது என்று கூறி எதிர்த்துள்ளது.

ஹர்பஜன் மீது தடை விதிக்கப்பட்டதை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வன்மையாகக் கண்டித்தது மட்டுமின்றி, அப்பிரச்சினையில் ஒரு முடிவு தெரியும் வரை சிட்னியை விட்டு புறப்படுவதில்லை என்று கூறிவிட்டது.

கான்பிராவில் நடைபெற உள்ள பயிற்சி ஆட்டத்திற்காக சிட்னியில் இருந்து புறப்பட வேண்டிய இந்திய அணி, இதுவரைப் புறப்படவில்லை.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசரக் கூட்டம், வாரியத் தலைவர் சரத்பவார் தலைமையில் இன்று காலை மும்பையில் நடந்தது.

இக்கூட்டத்தில் ஹர்பஜன் மீது சாற்றப்பட்ட குற்றச்சாற்று குறித்தும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் அளித்த தீர்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ராஜீவ் சுக்லா, ஹர்பஜன் சிங் மீது சுமத்தப்பட்ட நிறவெறிப் புகார் நியாயமற்றது. அதனை ஏற்க இயலாது என்று கூறினார்.

இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட்டுதான் முக்கியமேத் தவிர, மற்ற எதையும் பெரிதாக கருதவில்லை என்று கூறிய ராஜீக் சுக்லா, கிரிக்கெட் ஆட்டத்தில் இதுநாள் வரை இந்தியா காத்து வரும் நற்பெயரை காப்பாற்ற வேண்டியது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடமை என்றும், ஹர்பஜனுக்கு எதிரான குற்றச்சாற்று அந்த நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.

ஹர்பஜன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்றின் மீது கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments