Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்ளே மீது யூசுஃப் வருத்தம்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (11:37 IST)
பெங்களூர் டெஸ்ட் 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் அனில் கும்ளே தன்னை நோக்கி சில வசைகளை ஏவினார் என்றும் இதனால் தனது கவனம் சிதறி ஆட்டமிழந்ததாகவும் பாகிஸ்தான் வீரர் மொகமது யூசுஃப் கூறியுள்ளார்.

இணையதளம் ஒன்றில் அவர் இது பற்றி கூறியபோது, "அனில் கும்ளே என்னிடம் சில வசை மொழிகளை பிரயோகித்தார், நான் உடனே அவரிடம் சென்று உங்களைப்போன்ற மூத்த வீரர்களுக்கு இது அழகல்ல என்று கூறினேன்" என்றார்.

அனில் கும்ளே இது போன்று நடந்து கொண்டது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய அவர் நடுவர்கள் சைமன் டாஃபல் மற்றும் ரூடி குயெர்ட்சன் ஆகியோரிடம் முறையிட்டதாகவும் யூசுஃப் கூறியுள்ளார்.

அனில் கும்ளேயுடன் இந்த வாக்குவாதம் நடந்து சரியாக 6 பந்துகளுக்கு பிறகு இர்பான் பந்தில் 24 ரன்களுக்கு யூசுஃப் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments