Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிக்கி போயேவிற்கு டெல்லி காவல் அழைப்பாணை

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (13:43 IST)
மறைந்த தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் ஹேன்சி குரோனியே தொடர்புடைய கிரிக்கெட் சூதாட்ட வழக்கு கு‌றி‌த்து ‌விசா‌ரி‌க்க தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் நிக்கி போயேவிற்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஆனால் எந்த தேதியில் அவர் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடவில்லை என டெல்லி காவல்துறை குற்றவியல் பிரிவு தலைமை அதிகாரி மது திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருது ஓய்வு பெற்ற நிக்கி போயே தற்போது சண்டிகாரில் நடைபெற்று வரும் இந்திய கிரிக்கெட் லீக் ஆட்டங்களில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

கிரிக்கெட் சூதாட்ட வழக்கு தொடர்பாக 2006ம் ஆண்டு ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டிகளின் போது மற்றொரு வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் டெல்லி காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

அப்போது நிக்கி போயே இந்தியாவிற்கு வரவில்லை என்பதால் தற்போது விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments